ஒரே விஷயத்தை பாராட்டிய அனிருத் - கீர்த்திசுரேஷ்.. வைரல் புகைப்படங்கள்..!

ஒரே விஷயத்தை பாராட்டிய அனிருத் - கீர்த்திசுரேஷ்.. வைரல் புகைப்படங்கள்..!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே விஷயத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

சமீபத்தில் சென்னை விமான நிலையம் சென்ற அனிருத் அங்கு செயல்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கூடுதல் கவுண்டர்கள் மற்றும் புதிய ஊழியர்களை பணி அமர்த்தியதற்கு நன்றி என்றும் முன்பை விட மிகவும் எளிதாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை தான் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் சமூகமான அனுமதி அளித்த விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி என்றும் புதிய உள்கட்டமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் புதிய உள்கட்டமைப்பு வசதியை அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் ஒரே நாளில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES