நெருக்கமான காட்சியில் நடிக்கும்போது இப்படித்தான் இருக்கும்!! திடீர் ட்ரெண்ட் நடிகை ஓபன் டாக்
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் திடீரென ட்ரெண்ட்டாகி மிகபெரியளவில் பிரபலமானவர் தான் பிரபல மராத்தி நடிகை கிரிஜா ஓக். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள 38 வயதான கிரிஜா, 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகினார். மராத்தி மொழியில், கோஷ்தா சோட்டி டோங்க்ரேவடி, குல்மோஹர், மானினி, அட்குலா மட்குலா போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

ஜீ மராத்தியில் வெளியான லஜ்ஜா என்ற தொடரில் மனஸ்வினி தேசாய் என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் கிரிஜா.
சமீபத்தில் அவரது புகைப்படங்கள் டிரெண்டானதை அடுத்து, பேட்டியொன்றில் நெருக்கமான காட்சிகளில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், முத்தக்காட்சியில் நடிக்க மனதளவில் எப்படி தாயர்படுத்திக் கொள்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கிரிஜா, இந்த கேள்வியை என்னிடம் பல கேட்டிருக்கிறார்கள். என் பதில் ஒன்றுதான், அது ஒரு துண்டு காகிதத்தை முத்தமிடுவது போன்றது. எந்த உணர்ச்சியும் இருக்காது, சில நேரங்களில் நெருக்கமான காட்சியை எடுக்கும்போது, முன்னால் ஒரு கலைஞர் கூட இருக்கமாட்டார்கள்.

கேமரா ஸ்டாண்ட்-ஐ பார்த்தோ அல்லது லைட்டிங் செய்யப் பயன்படுத்தப்படும் கருப்புத் துணையை பார்த்துக்கொண்டு காதல் வசனங்களை சொல்ல வேண்டும். அப்படி பலமுறை நான் பேசியிருக்கிறேன் என்று நடிகை கிரிஜா ஓக் தெரிவித்துள்ளார்.