பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா ஓவியா? அப்ப 2 வீ டு கான்செப்ட் என்பது இதுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறாரா ஓவியா? அப்ப 2 வீ டு கான்செப்ட் என்பது இதுதானா?

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்று கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.  

ஆனால் வழக்கம் போல் 15 போட்டியாளர்கள் தான் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு வீடுகள் என்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்களும் இரண்டாவது வீட்டில் ஏற்கனவே 6 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற ஓவியா இந்த சீசனில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓவியா கூறியபோது, ‘ தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மீண்டும் அழைப்பு வந்திருக்கிறது என்றும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

அப்படியானால் இரண்டு வீடு கான்செப்ட் என்பது ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்கள் இன்னொரு வீட்டில் பழைய போட்டியாளர்கள் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவியா உட்பட கடந்த ஆறு சீசனில் பிரபலமானவர்கள் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது உண்மையாகும் என்று கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES