விஷாலின் 'மார்க் ஆண்டனி' சுதந்திர தின போஸ்டர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

விஷாலின் 'மார்க் ஆண்டனி' சுதந்திர தின போஸ்டர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

விஷால் நடிப்பில் உருவான 'மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார்.

LATEST News

Trending News