நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்து ஹீரோ ரெடி!.. வைரலாகும் அவரது மகனின் புகைப்படம்!!
ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ஜெயம் ரவி அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களுடன்படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார்.
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஆரவ் ரவி, அயான் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் ஆரவ், தனது தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி மற்றும் அவரது மகன்கள் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்த ஹீரோ ரெடி என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதோ புகைப்படம்.