ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தின் முக்கிய பணி தொடக்கம்.. தள்ளி போகிறதா ரிலீஸ் தேதி..!

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தின் முக்கிய பணி தொடக்கம்.. தள்ளி போகிறதா ரிலீஸ் தேதி..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ’என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இறைவன்’. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அதில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் யுவன் சங்கர் ராஜா தனது குழுவினர்களுடன் பின்னணி இசை பணியில் பிசியாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காலதாமதமாகி வருவதை அடுத்து ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றும் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படம் ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES