யாருமே எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் லியோ படக்குழு- விஜய் திரைப்பயணத்திலேயே முதல்முறை!!

யாருமே எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் லியோ படக்குழு- விஜய் திரைப்பயணத்திலேயே முதல்முறை!!

லோகேஷ் கனகராஜ் மிகவும் தரமான படங்களாக மக்களுக்கு கொடுத்து சிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்று வருகிறார்.

இப்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார், Seven Screen Studio நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். 

விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள், அதுவே ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்கின்றனர்.

தற்போது லியோ படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. 

அதாவது லியோ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம், 2025-2026 இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விஜய்யின் இத்தனை வருட திரைப்பயணத்தில் 2 பாகமாக வெளியாகும் படம் இதுவே.

யாருமே எதிர்ப்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் லியோ படக்குழு- விஜய் திரைப்பயணத்திலேயே முதல்முறை | Surprise News From Leo Team For Fans

LATEST News

Trending News