500 தியேட்டரில் இன்று ரிலீஸாகும் சூர்யா படம்.. ஹவுஸ்புல் புக்கிங்,..!
சூர்யா நடித்த திரைப்படம் இன்று 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’வாரணம் ஆயிரம்’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இரண்டு வேடங்களில் சூர்யா மிக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியாக உள்ளது. 500க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசையில் உருவான பாடல்கள், கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் இயக்கம், சூர்யா - சமீரா ரெட்டி ரொமான்ஸ் காட்சிகள், சிம்ரன், திவ்யா ஆகியோர்களின் அபாரமான நடிப்பில் உருவான இந்த படம் ரிலீஸ் ஆன போது மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.