டீன் ஏஜ் பெண் போல் மாறிய சோனியா அகர்வால்..!

டீன் ஏஜ் பெண் போல் மாறிய சோனியா அகர்வால்..!

நடிகை சோனியா அகர்வால் தற்போது 41 வயதில் இருக்கும் நிலையில் அவர் டீன் ஏஜ் பெண் போல் மாறி எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமாக ரசிகர்கள் ’எப்படி இது சாத்தியம்’ என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் 

நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு சிம்பு நடித்த ’கோவில்’ விஜய் நடித்த ’மதுர’ உள்பட பட திரைப்படங்களில் நடித்தார் 

சமீபத்தில் கூட அவர் பிரபுதேவா நடித்த ’பாகீரா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. தற்போது தமிழ் மலையாள திரையுலகில் மூன்று படங்களில் நடித்து வரும் சோனியா அகர்வால் பிஸியாக தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோனியா அகர்வால் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் சற்றுமுன் டீன் ஏஜ் பெண் போல் மாடிப்படிக்கட்டில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். ஒயிட் ஏஞ்சல் என்றும், மிகச் சிறந்த அழகி, எப்படி இது சாத்தியம்’ என்றும் பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES