'காவாலா' பாடலுக்கு தாறுமாறான ஆட்டம் போட்ட நடிகை .. தமன்னா பார்த்தால் அவ்வளவுதான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
மேலும் இந்த பாடலை பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கையும் சாதனை செய்து வருகிறது. அது மட்டும் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை சோபியா அன்சாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’காவாலா’ பாடலுக்கு தாறுமாறாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியின் உச்சமாக அவரது காஸ்ட்யூம் இருக்கும் நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒருவேளை தமன்னா இந்த வீடியோவை பார்த்தால் அவ்வளவு தான் என்பது போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது. ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் ’காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும், இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
