ஜெயிலர் படத்திற்கு வந்த சிக்கல்.. டைட்டில் மாற்றப்படுகிறதா?
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
முதல் பாடல் காவாலா வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில் அடுத்து ஹுகும் என்ற இரண்டாவது பாடல் ப்ரோமோ நேற்று வந்திருந்தது. அந்த பாடலுக்கு தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தற்போது ஜெயிலர் என்ற டைட்டிலால் ஒரு ஒரு பிரச்சனை வந்து இருக்கிறது. ஏற்கனவே மலையாளத்தில் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. அதனால் அதே டைட்டிலில் கேரளாவில் ரஜினி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் வந்து இருக்கிறது.
கேரளாவில் மட்டும் வேறு டைட்டிலில் ஜெயிலர் படம் வர பரிசீலனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.