விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள சமந்தா..!

விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள சமந்தா..!

திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதற்கு முன் இருவரும் இணைந்து மகாநடி திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

அதை தொடர்ந்து தற்போது குஷி திரைப்படத்தில் இரண்டாவது முறையாக ஜோடியாக நடிக்கிறார்கள். இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து 'நா ரோஜா நுவே' எனும் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள சமந்தா.. வைரலாகும் வீடியோ | Samantha Intimate Scenes With Vijay Devarakonda

இதை தொடர்ந்து குஷியின் இரண்டாவது பாடல் ஆராதயா நேற்று மாலை வெளிவந்தது. இப்படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா கணவன், மனைவியாக நடித்துள்ளனர். அதை காட்டும் விதமாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள சமந்தா.. வைரலாகும் வீடியோ | Samantha Intimate Scenes With Vijay Devarakonda

மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான ரொமான்ஸ் காட்சியில் சமந்தா நடித்துள்ளார். அந்த காட்சிகளும் இந்த லிரிகள் பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. youtube தளத்தில் இப்பாடல் தான் தற்போது படுவைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா குஷி படத்தை தொடர்ந்து சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக சினிமாவில் இருந்து சமந்தா ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள சமந்தா.. வைரலாகும் வீடியோ | Samantha Intimate Scenes With Vijay Devarakonda

மேலும் அவருக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் நடக்கப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது. இவை அனைத்தும் நல்லபடியாக முடிந்து மீண்டும் முழு வீச்சில் சமந்தா என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News