என்ன ஆச்சு திஷா பதானிக்கு? டூ பீஸ் உடையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த 'கங்குவா' நாயகி..!
சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள 58 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் அந்த புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகின்றனர். அந்த வகையில் சற்று முன் அவர் டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த புகைப்படம் பதிவு செய்து வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகி உள்ள நிலையில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர் சிவப்பு உடையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்திருந்த நிலையில் அவை மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் தற்போது இந்த டூ பீஸ் நீச்சல் உடை புகைப்படம் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.