காதலரை பிரிந்த பிக் பாஸ் ஆயிஷா? திடீரென நிச்சயதார்த்த போட்டோக்கள் நீக்கம்...

காதலரை பிரிந்த பிக் பாஸ் ஆயிஷா? திடீரென நிச்சயதார்த்த போட்டோக்கள் நீக்கம்...

ஜீ தமிழ் சத்யா சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் ஆயிஷா. அவர் அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த ஷோவில் அவர் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவகாரத்தாகிவிட்டது என ஒருவர் கொடுத்த பேட்டி அந்த நேரத்தில் வைரல் ஆனது. ஆயிஷா உடன் காதலில் இருந்ததாக கூறி ஒரு நபர் அப்படி பேட்டி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலரை பிரிந்த பிக் பாஸ் ஆயிஷா? திடீரென நிச்சயதார்த்த போட்டோக்கள் நீக்கம் | Did Ayesha Broke Up With Lover Haran Reddyபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஆயிஷா அந்த சர்ச்சைகள் எதற்கும் பதில் கூறவில்லை. இருப்பினும் அவர் தனது காதலர் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

பிரபல போட்டோகிராபர் ஹரன் ரெட்டி என்பவரை காதலர் தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டார் ஆயிஷா. அவர்கள் போட்டோவும் இணையத்தில் வைரல் ஆனது.

காதலரை பிரிந்த பிக் பாஸ் ஆயிஷா? திடீரென நிச்சயதார்த்த போட்டோக்கள் நீக்கம் | Did Ayesha Broke Up With Lover Haran Reddyஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் தற்போது காதலரின் போட்டோக்கள் அனைத்தையும் ஆயிஷா இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.

அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இருப்பினும் ஆயிஷா இது பற்றி இன்னும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. 

LATEST News

Trending News