நடிகர் பிரகாஷ் ராஜின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா...
படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக வில்லன்களையும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். வில்லன்களின் வில்லத்தனமே படத்திற்கு மிக முக்கியமான பலமாக அமைகிறது.
மிரட்டலான நடிப்பால் படங்களில் ரசிகர்களின் வெறுப்பையும் கோபத்தையும் எவ்வளவு தூரம் சம்பாதிக்கிறார்களோ அதுவே வில்லன்களின் நடிப்பிற்கு கிடைக்கும் வெகுமதி என்றும் கூறலாம். அப்படி ரசிகர்களை கட்டிப்போட்ட வில்லன்களில் ஒருவர் தான் பிரகாஷ் ராஜ்.
பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் வில்லனாக அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி வரும் பிரகாஷ் ராஜ் ஒரு படத்திற்கு மட்டும் 2.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவருடைய சொத்துமதிப்பு மட்டும் 6 மில்லியன் அதாவது 36 கோடி ரூபாய் என தெரிகிறது. படம் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளையும் தயாரிக்கிறார்.
இவர் சொந்தமாக டூயட் மூவிஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மும்பை மற்றும் சென்னையில் வீடுகள் வைத்துள்ள பிரகாஷ் ராஜ், சொகுசு கார்களையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.