ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு.. கேட்டாலே அதிரும் பார் உனக்கு: 'நா ரெடி' பாடல் வீடியோ..!

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு.. கேட்டாலே அதிரும் பார் உனக்கு: 'நா ரெடி' பாடல் வீடியோ..!

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் ’நா ரெடி’ என்ற பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த பாடல் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் பாடிய இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார் என்பதும் அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் அளவில் உள்ளது என்பதும் அதேபோல் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காண்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் இந்த பாடல் நிச்சயம் திரையரங்கில் திரையிடும்போது எந்த ஒரு விஜய் ரசிகரும் இருக்கையில் உட்கார்ந்து இருக்க மாட்டார் என்பது உறுதி.

மொத்தத்தில் ஜாலியாக இந்த ’நா ரெடி’ பாடலுடன் டியோ திரைப்படம் ஆரம்பமாகும் என்பதும் அதன் பிறகு படிப்படியாக ஆக்‌ஷன் பக்கம் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று விஜய் பிறந்தநாளில் விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இந்த பாடல் அமைந்துள்ளது என்பது அனைவருக்கும் திருப்தியே.

LATEST News

Trending News

HOT GALLERIES