என்னுடைய முதல் முயற்சி.. நடிகை ஷாலு ஷம்முவின் வைரல் வீடியோ..!

என்னுடைய முதல் முயற்சி.. நடிகை ஷாலு ஷம்முவின் வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு ஜிம்மில் தான் முதல் முயற்சி எடுத்துள்ளதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்தில் அவர் சூரிக்கு ஜோடியாக காமெடி மற்றும் கிளாமரில் கலக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஷாலு ஷம்மு நடித்திருக்கிறார் என்பதும் அதேபோல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஷாலு சமம் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜிம்மில் ஜிம் ட்ரைனருடன் ஹேங்கிங் என கூறப்படும் கம்பியை பிடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அந்தரத்தில் தொங்குவது என்பது எனக்கு இதுவரை பயிற்சி இல்லை, முதல் முறையாக எனது ஜிம் பயிற்சியாளருடன் இதை முயற்சித்து உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES