அஜித் படத்தில் ஒரே ஒரு நாள் நடித்துவிட்டு திடீரென விலகிய 'வாரிசு' நடிகை.. என்ன காரணம்?
அஜித் படத்தில் ஒரே ஒரு நாள் நடித்துவிட்டு அதன் பிறகு திடீரென அந்த படத்தில் இருந்து தான் விலகி விட்டதாக ’வாரிசு’ படத்தில் நடித்த நடிகை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இரண்டு படங்களுமே ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதாவின் நடிப்புக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நான் தான் நடிக்க ஒப்பந்தம் ஆனேன் என்றும் முதல் நாள் படப்பிடிப்பும் நடந்தது என்றும் கூறினார்.
ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்படிப்பு நிறுத்தப்பட்டது என்றும் அதன் பிறகு வைரஸ் பயம் காரணமாக நான் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித் அம்மாவாக ’வலிமை’ படத்தில் சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.