ஐஸ்வர்யா ராஜேஷின் 'பிளாக் அண்ட் பிளாக்': வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

ஐஸ்வர்யா ராஜேஷின் 'பிளாக் அண்ட் பிளாக்': வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ‘பிளாக் அண்ட் பிளாக்’ உடையில் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு ’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அவர் நடித்துள்ள ’டிரைவர் ஜமுனா’ உள்பட ஒருசில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் அடுத்தடுத்து இந்த படங்கள் ரிலீசாக உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவ்வப்போது அதில் அவர் பதிவு செய்ய புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ‘பிளாக் அண்ட் பிளாக்’ போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News