எவனாச்சும் முகத்தை பாக்குறானா? ஷிவானியின் ஹாட் போட்டோஷூட்டிற்கு குவியும் கமெண்ட்ஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் சினிமா நடிகையுமான ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் கமல்ஹாசனின் ’விக்ரம்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷிவானி நாராயணன் இன்ஸ்டாவில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 3.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராமில் உச்சகட்ட கருப்பு கிளாமர் காஸ்ட்யூம் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் வர்ணித்து கமெண்ட்ஸ் அளித்துள்ள நிலையில் அந்த கமெண்ட்ஸ்களும் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு கமெண்ட்டாக ‘எவனாவது ஒருத்தன் முகத்தை பாக்குறானா? என்ற கமெண்ட்ஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் ஷிவானி நாராயணன் தீபாவளி நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.
நடிகை ஷிவானி நாராயணன் தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படம், வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்.