மூக்குத்தி குத்தியவரை படாதபாடு படுத்திய அஜித் பட நாயகி.. வீடியோ வைரல்
அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை மூக்குத்தி குத்தியவரை படாத பாடு படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் நடித்த ’வரலாறு’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை கனிகா. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஷ்யாம் ராதா கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகை கனிகா அவ்வப்போது சமூக வலைதளங்களில் குறிப்பாக இந்த இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சமீபத்தில் மூக்குத்தி குத்திக்கொண்டதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். மூக்குத்தி குத்தும்போது பயந்து நடுங்கி, மூக்குத்தி குத்தியவரை படாதபாடு படுத்தி ஒருவழியாக நடிகை கனிகா மூக்குத்தி குத்தி கொண்டார். அதன்பின் மூக்குத்தியுடன் தனது அழகை கண்ணாடியில் பார்த்து மகிழும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.