லக்கி போட்டோகிராபர்: ரம்யா பாண்டியனின் போட்டோஷூட்டுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்

லக்கி போட்டோகிராபர்: ரம்யா பாண்டியனின் போட்டோஷூட்டுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்

நடிகை ரம்யா பாண்டியனை போட்டோஷூட் எடுத்தவரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த போட்டோகிராபரை லக்கி என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருப்பு கிளாமர் உடையில் அவர் பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் இந்த போட்டோஷூட்டை எடுத்தது எப்படி என்பது குறித்த வீடியோவை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் போட்டோகிராபர் கூறும் கோணத்தில் ரம்யா பாண்டியன் போஸ் கொடுத்து நிற்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்துள்ள நிலையில் போட்டோகிராபரை லக்கி என பல நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News