'சார்பாட்டா பரம்பரை' மாரியம்மாவா இவர்? பிங்க் பிகினியில் கலக்கல் புகைப்படங்கள்!

'சார்பாட்டா பரம்பரை' மாரியம்மாவா இவர்? பிங்க் பிகினியில் கலக்கல் புகைப்படங்கள்!

சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்த நடிகை துஷாரா விஜயன், பிகினியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ’போதை ஏறி போச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்பதால் அதன் பிறகு குறும்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் துஷாரா விஜயன் அற்புதமாக நடித்து இருந்தார். இந்த கேரக்டர் அவருடைய நடிப்புக்கு சரியான தீனியாக இருந்தது என்பதும், இந்த கேரக்டரால் அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்திலும் ஒரு போல்டான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் துஷாரா விஜயன் சமீபத்தில் பிங்க் பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.

LATEST News

Trending News