யாஷிகாவின் வெறித்தனமான வொர்க்-அவுட்: வேற லெவலில் வைரலாகும் வீடியோ
நடிகை யாஷிகா வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான ’கடமையை செய்’ என்ற திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது அவர் 6 திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ‘இலக்கை அடைய வெறித்தனமான பிட்னஸ்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.