ஒரு வருடத்திற்கு முன்பே வெளியான மாஸ் நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி!

ஒரு வருடத்திற்கு முன்பே வெளியான மாஸ் நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி!

ஹாலிவுட் திரையுலகில் பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவித்து வருவது வழக்கமாக உள்ளது. அதேபோல் தென்னிந்திய மாஸ் நடிகர் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு திரை உலகின் மாஸ் நடிகர் பிரபாஸ் நடித்த ‘பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அதன் பின் அவர் நடித்த ‘சாஹோ’ மற்றும் ’ராதேஷ்யாம்’ ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் பிருத்திவிராஜ், ஜெகபதிபாபு, ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடித்து உள்ளனர் என்பதும் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News