செருப்பு மாலை போட்ட பார்த்திபன் ரசிகர்கள்: புளூசட்டை மாறன் கமெண்ட் என்ன தெரியுமா?

செருப்பு மாலை போட்ட பார்த்திபன் ரசிகர்கள்: புளூசட்டை மாறன் கமெண்ட் என்ன தெரியுமா?

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படத்தை விமர்சனம் செய்த புளூசட்டை மாறனின் உருவ பொம்மைக்கு பார்த்திபனின் ரசிகர்கள் செருப்பு மாலை போட்ட நிலையில் இது குறித்து தனது புளூசட்டை மாறன் சமூக வலைத்தளத்தில் தனது கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.

பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு முன்பு ஒரு ஈரானிய திரைப்படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் வந்திருக்கிறது என புளூசட்டை மாறன் சுட்டிக்காட்டினார். இதற்கு பார்த்திபனும் நீண்ட விளக்கம் அளித்தார் என்பதும் இருவருடைய சமூக வலைதள பதிவுகளும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள ஒரு திரையரங்கில் ‘இரவின் நிழல் படம் பார்க்க வந்த பார்த்திபனின் ரசிகர்கள் புளூசட்டை மாறன் இந்த படத்தை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் ஆத்திரம் அடைந்து புளூசட்டை மாறன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை போட்டு தீயிட்டுக் கொளுத்தினர்.

இதுகுறித்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த புளூசட்டை மாறன் ’புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார்! உங்கள் நாகரீக செயல் தொடரட்டும்’ என்று பதிவு செய்துள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES