நேற்று ரம்யா பாண்டியன், இன்று ராஷ்மிகா மந்தனா: செம வைரலாகும் ரெட் ரோஸ் போட்டோஷூட்!

நேற்று ரம்யா பாண்டியன், இன்று ராஷ்மிகா மந்தனா: செம வைரலாகும் ரெட் ரோஸ் போட்டோஷூட்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு காஸ்டியூமில் பதிவு செய்யப்பட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

கன்னட திரைப்படங்களில் அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடித்த ’சுல்தான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய நிலையில் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவர் பாலிவுட் திரையுலகில் நடித்து வரும் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா 32 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ராஷ்மிகா மந்தனா சிவப்பு காஸ்டியூமில் பதிவு செய்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. நேற்று ரம்யா பாண்டியன் சிவப்பு காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலான நிலையில் இன்று ராஷ்மிகா மந்தனாவின் ரெட் ரோஸ் சிவப்பு காஸ்ட்யூம்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒருசில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 14 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளன என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES