'சின்னத்தலைவர் ஆகின்றாரா சிவகார்த்திகேயன்? 'தலைவர் 169' படத்தின் மாஸ் தகவல்!

'சின்னத்தலைவர் ஆகின்றாரா சிவகார்த்திகேயன்? 'தலைவர் 169' படத்தின் மாஸ் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

’எந்திரன்’ படத்திற்கு பிறகு ரஜினியுடன் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன், மற்றொரு முக்கிய கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நெல்சன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் அல்லது பாடல் எழுதுவார் என்ற வகையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து ஒரு பாடலையும் எழுதுவதாக தகவல் கசிந்துள்ளது.

குறிப்பாக இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இளவயது ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் சின்ன தலைவர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் உண்மை என்றால் சிவகார்த்திகேயனுக்கு சின்னத்தலைவர் என்ற பட்டம் நிரந்தரமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES