நடிகை சாய்பல்லவிக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

நடிகை சாய்பல்லவிக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் என்றும் அதனால் தான் அவர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து சாய்பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.

’பிரேமம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் மலர் என்ற மனதை கவர்ந்த கேரக்டரில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பின்னர் அவர் தமிழில் ’தியா’ ’மாரி 2’ ‘என்ஜிகே’ உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிஸியாக இருந்த சாய்பல்லவி தற்போது திடீரென படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதாகவும், அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை சாய் பல்லவி, ‘ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல ஒரு இமேஜ் உள்ளது என்றும், சாய் பல்லவி என்றால் திருப்திகரமான கேரக்டரில் நடிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும், அதனால் நல்ல கதைக்காக காத்து கொண்டிருக்கின்றேன் என்றும், அதனால்தான் அதிக படங்களில் ஒத்துக்கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை வைத்து திருமணத்துக்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாவதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறி உள்ளார். இதனை அடுத்து சாய்பல்லவிக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

LATEST News

Trending News