'கேஜிஎப்' வசூலை முறியடித்த புனித் ராஜ்குமாரின் கடைசி படம்!

'கேஜிஎப்' வசூலை முறியடித்த புனித் ராஜ்குமாரின் கடைசி படம்!

கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்த நிலையில் அவரது பிறந்தநாள் அவர் இல்லாமல் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவர் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜேம்ஸ்’ வெளியான நிலையில் இப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகை பொறுத்தவரை இதுவரை வெளியான திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படம் என்ற பெருமையை யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று வெளியான புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் அந்த வசூலை முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் ’ஜேம்ஸ்’ திரைப்படம் 27 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ’கேஜிஎப்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் ’ஜேம்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LATEST News

Trending News