கிளாமரை தொடர்ந்து… நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்!

கிளாமரை தொடர்ந்து… நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மாளவிகா மோகனன்!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன். ரசிகர்கள் இவரை சினிமாவில் பார்ப்பதைவிட சோஷியல் மீடியாவில் பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். அந்த அளவிற்கு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டுவரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் ரசிகர்களையே மிரள வைத்திருக்கிறது.

பொதுவாக தென்னிந்திய நடிகைகள் பிகினி போன்ற உடைகளை சினிமாவில் உடுத்துவதற்கே தயக்கம் காட்டுவர். ஆனால் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்டும் அளவிற்கு நடிகை மாளவிகா மோகனன் சமீபகாலமாக கிளாமர் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். அதுவும் இவருடைய மாலத்தீவு புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவிவருகிறது.

அந்த வகையில் மாலத்தீவில் உற்சாகமாக விடுமுறையை கழித்துவரும் நடிகை மாளவிகா தற்போது நீச்சல் உடையணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த உடைக்கு மேலும் மெருகேற்றும் விதமாக அவர் கழுத்தில் டாலர் வைத்த ஒரு செயினையும் அணிந்துள்ளார். இதனால் மாளவிகா புயல் மாலத்தீவில் மையம் கொண்டிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் சமீபத்தில் இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது நீலக்கடல், நீல வானம், நீலநிற பிகினி என ரசிகர்களை மிரள வைத்திருக்கும் இந்த நீச்சல் உடை புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News