மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரேஸில் களமிறங்கும் ஜெய்!

மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரேஸில் களமிறங்கும் ஜெய்!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் அஜித் மோட்டார் பைக் மற்றும் கார் ரேஸில் கலந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அஜித்தை அடுத்து நடிகர் ஜெய்யும் கார் பந்தயங்களில் அவ்வப்போது கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கார் ரேஸ் நடக்க உள்ள நிலையில் இதில் நடிகர் ஜெய் கலந்து கொள்ள உள்ளார். நடிகர் ஜெய்க்கு ஸ்பான்சராக பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக சிறப்பாக பயிற்சி பெற்றுள்ள நடிகர் ஜெய், பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த ஆண்டு சில நம்பிக்கை தரக்கூடிய திரைப்படங்களில் ஜெய் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி இசையமைப்பாளர் என்று புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார் ரேஸ் வீரர் என்ற அவதாரமும் அவருக்கு இணைந்து உள்ளது என்பதால் இந்த ஆண்டு அவருக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

LATEST News

Trending News