உலக ரசிகர்களுக்கு அல்வா; இந்தியாவில் முன்னதாக ஸ்பைடர்மேன் ரிலீஸ்!

உலக ரசிகர்களுக்கு அல்வா; இந்தியாவில் முன்னதாக ஸ்பைடர்மேன் ரிலீஸ்!

மார்வெல் ஸ்டுடியோஸின் வெளியீடான ஸ்பைடர்மேன் உலக நாடுகளில் வெளியாகும் முன்னதாக முதன்முறையாக இந்தியாவில் வெளியாகிறது.


சூப்பர்ஹீரோ படங்கள் எடுத்து உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். இந்த ஆண்டில் ஷாங் சீ, இட்டர்னல்ஸ் உள்ளிட்ட படங்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ் அடுத்ததாக ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம் படத்தை ரிலீஸ் செய்கிறது.
 

 

முந்தைய ஸ்பைடர்மேன் பாகங்களில் இருந்த டாக்டர் ஆக்டோபஸ், எலக்ட்ரோ உள்ளிட்ட பிரபல வில்லன்கள் மல்டிவெர்ஸ் கான்செப்டில் இதில் இணைவதால் இந்த படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமெரிக்காவில் இந்த படம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகிறது. மற்ற நாடுகளிலும் டிசம்பர் 17க்கு பிறகே ஸ்பைடர்மேன் வெளியாகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் உலக நாடுகளுக்கு முன்னதாக டிசம்பர் 16ம் தேதியே தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

HOT GALLERIES