சங்கராந்தி கொண்டாட்டம்… தெலுங்கு திரையுலகில் உருவான சிக்கல்!

சங்கராந்தி கொண்டாட்டம்… தெலுங்கு திரையுலகில் உருவான சிக்கல்!

சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு சினிமாவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று பெரிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சங்கராந்தி பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும். அந்த பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் மூன்று ரிலீஸை அறிவித்துள்ளன.

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் நடிக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி ரிலிஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியா முழுவதும் ரிலீஸாகும் பேன் இந்தியா படமாகும். அதே போல மற்றொரு பேன் இந்தியா படமான ராதே ஷ்யாம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலிஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் பவன் கல்யாண் நடிக்கும் அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கும் ஜனவரி 12 ஆம் தேதி கோதாவில் இறங்கியுள்ளது. மூன்றுமே மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களின் படங்கள் என்பதால் போதுமான திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் எழலாம் என அஞ்சப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES