நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின்?

நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின் நடிக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வாணிபோஜன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவின் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ’கூழாங்கல்’, ‘நெற்றிக்கண்’ உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது கவின் நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES