ரஜினி, கமல் வெற்றிப்பட இயக்குனருடன் முதல்முறையாக இணையும் தனுஷ்!

ரஜினி, கமல் வெற்றிப்பட இயக்குனருடன் முதல்முறையாக இணையும் தனுஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவருடன் நடிகர் தனுஷ் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’, உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் உருவான ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

LATEST News

Trending News