காஜல் அகர்வால் விலகியதால் 62 வயது நடிகருக்கு ஜோடியான இலியானா!

காஜல் அகர்வால் விலகியதால் 62 வயது நடிகருக்கு ஜோடியான இலியானா!

62 வயது நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக நடிகை இலியானா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தற்போது ’கோஸ்ட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சட்டாரு என்பவர் இயக்கும் இந்த படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டதால் இந்த படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது.

இதனை அடுத்து காஜல் அகர்வாலுக்கு பதிலாக இந்த படத்தில்ல் நடிகை இலியானா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 34 வயதான இலியானா, 62 வயதான நாகார்ஜூனா ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News