மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்

மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்

பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மொட்டை தலையுடன் இருக்கும் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

 

பகத் பாசிலின் வில்லன் போஸ்டர் இன்று வெளியானது. மொட்டை தலையுடன் மாஸாக இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

 

புஷ்பா

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த படக்குழு, முதல் பாகத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES