என்ன சிம்ரன் இதெல்லாம்: கீர்த்தி பாண்டியனின் கிளாமர் வீடியோ வைரல்
பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும், ‘அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நடித்தவருமான கீர்த்தி பாண்டியன் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
‘அன்பிற்கினியாள்’ படத்தில் எந்த அளவுக்கு குடும்பபாங்கான கேரக்டரில் நடித்தாரோ, அதற்கு நேர்மாறாக படு கிளாமரான புகைப்படங்களை சமீபகாலமாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் படு கிளாமராக கடற்கரையில் தோற்றமளிக்கிறார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் ’என்ன சிம்ரன் இதெல்லாம்’ உள்பட பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அன்பிற்கினியாள்’ படத்திற்கு பின்னர் வேறு பட வாய்ப்புகள் கீர்த்தி பாண்டியனுக்கு கிடைக்காத நிலையில் விரைவில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.