முதல் காதலியின் நீச்சலுடை புகைப்படத்தை வெளியிட்ட ராம்கோபால் வர்மா: வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது முதல் காதலி என்று கூறி ஒரு பெண்ணின் நீச்சல் உடை புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தையும், அவருடைய பதிவையும் நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்
ஒரு பெண்ணின் நீச்சல் உடை புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த இயக்குனர் ராம்கோபால் வர்மா, அந்த பெண் தற்போது அமெரிக்காவில் மகப்பேறு மருத்துவ நிபுணராக இருப்பதாகவும், நான் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அதே கல்லூரியில் படித்த அவரை ஒருதலையாக காதலித்ததாகவும் கூறினார்
இந்த நிலையில் அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் அந்த பெண் எப்படி இன்ஜினியரிங் கல்லூரியில் உங்களுடன் படித்து இருப்பார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இயக்குனர் ராம் கோபால் வர்மாவை வச்சு செய்து வருகின்றனர். இதற்கும் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் ராம்கோபால் வர்மா. தான் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மெடிக்கல் காலேஜில் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தால் சில மாதங்கள் எம்பிபிஎஸ் மாணவர்கள் தங்கள் கல்லூரி வளாகத்தில் படித்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அதன்பின் திடீரென அந்த பதிவை அவர் டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.