இதுவும் கடந்து போகும்! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் ஸ்ரீதர் சேனா வெளியிட்ட வீடியோ!

இதுவும் கடந்து போகும்! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் ஸ்ரீதர் சேனா வெளியிட்ட வீடியோ!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த பல ஆண்டுகளாக சீசன் 8யை நிறைவு செய்யவுள்ள நிலையில் இருக்கிறது சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சி. கொரோனா லாக்டவுனிற்கு பிறகு கடந்த ஆண்டு முடிய இருந்த இந்த நிகழ்ச்சி தற்போது கடந்த மாதங்கள் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

பல எபிசோட்டுகள் கழித்து கடந்த வாரம் போட்டியாளர் ஸ்ரீதர் சேனா சரியாக பாடவில்லை என்று எலிமினேட் செய்யப்பட்டார். இதற்கு பல ரசிகர்கள் விமர்சித்து வந்தநிலையில் இதற்கு முழு காரணம் பாடகர் பென்னி தயால் தான் என்று அவரை திட்டிய வண்ணம் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தன்மேல் வரும் விமர்சனங்கள் சரியானது கிடையாது என்று சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சி சம்பந்தபட்ட போஸ்ட்களை பதிவிட மாட்டேன் என்று கூறியும் அடுத்த சீசனுக்கும் வரபோவதில்லை அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ஸ்ரீதர் சேனா கடற்கரையில் இருந்து கொண்டு பாடல்பாடியுள்ளார். இதுவும் கடந்து போகும் என்ற பாடலை பாடி வீடியோவை வெளியிட்ட ஸ்ரீதர் சேனாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LATEST News

Trending News