42 வருடங்களுக்கு பின் சென்னை தியேட்டருக்கு சென்ற கமல்ஹாசன்: தியேட்டர் உரிமையாளர் டுவிட்!

42 வருடங்களுக்கு பின் சென்னை தியேட்டருக்கு சென்ற கமல்ஹாசன்: தியேட்டர் உரிமையாளர் டுவிட்!

சென்னையில் உள்ள தங்கள் திரையரங்குக்கு 42 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் வந்துள்ளது தங்களுக்கு பெருமையாக இருப்பதாக அந்த திரையரங்கின் உரிமையாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன். விஜய் சேதுபதி. பகத் பாசில் உள்பட பலரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இது குறித்து அந்த திரையரங்கின் உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக எங்கள் திரையரங்கை தேர்வு செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது திரையரங்கில் கமல்ஹாசன் அவர்கள் காலடி எடுத்து வைத்ததை நாங்கள் மிகவும் பெருமையாக கருதுகிறோம். கடந்த 1979ஆம் ஆண்டு ’கல்யாணராமன்’ திரைப்படத்தின் 100வது விழா எங்கள் திரையரங்கில் நடந்தபோது கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதன் பிறகு 42 ஆண்டுகள் கழித்து தற்போது தான் எங்கள் திரையரங்கிற்கு அவர் வந்து உள்ளார் என அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News