மதுக்கோப்பையை முத்தமிடும் கடல் அலை: ஆண்ட்ரியா வெளியிட்ட அழகிய வீடியோ!

மதுக்கோப்பையை முத்தமிடும் கடல் அலை: ஆண்ட்ரியா வெளியிட்ட அழகிய வீடியோ!

பிரபல நடிகை ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அங்கிருந்து அவர் நீச்சல்குள, நீச்சலுடை புகைப்படங்கள் உள்பட பல அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் கடற்கரையில் படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும், கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மது கோப்பையில் மதுவை ஊற்றிக் கொண்டிருக்கும் போது கடல் அலை அந்த மது கோப்பையை முத்தமிட்டு செல்வது போன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆண்ட்ரியாவின் இந்த பதிவு செய்த 2 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ’பிசாசு 2’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : அஸ்வின் கதாநாயகன், ஷிவாங்கி பாடகி....! வெளிவரவிருக்கும் புதிய பாடல்.....!

LATEST News

Trending News

HOT GALLERIES