காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்திற்கு முன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில், விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காத்துவாக்குல ரெண்டு காதல் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா, இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை, கடந்த 10 நாட்களாக, புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்த கையோடு, பின்னணி பணிகள் தொடங்கவுள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸாகும் என்று தகவல் கூறப்படுகிறது.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES