பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவனுக்கு பதிலாக நடிக்கவிருந்த முக்கிய இயக்குனர், யார் தெரியுமா?

பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவனுக்கு பதிலாக நடிக்கவிருந்த முக்கிய இயக்குனர், யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடந்த இடத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி திடீர் விசிட் அடித்தார். அப்போது விஜய் மற்றும் தோனி இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். மேலும் இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே செல்வராகவனுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகியதே இயக்குனர் மிஷ்கினிடம் தானாம். ஆனால் பிசாசு 2 படத்தினால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

LATEST News

Trending News