உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்!

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்!

நடிகரும் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான உதயநிதிக்கு புதிய பட்டம் ஒன்றை பிரபல இயக்குனர் அறிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் சீனுராமசாமி ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தைக் கொடுத்தார் என்பதும் அதன் பின்னர் தற்போது அந்த பட்டம் அவருக்கு நிலைத்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது உதயநிதிக்கு ’மக்கள் அன்பன்’ என்ற பட்டத்தை இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

 

சீனுராமசாமி தற்போது ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சீனு ராமசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் அன்பன் உதயநிதி அவர்கள் வெளியிடுவார் என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளதை அடுத்து உதயநிதி ’மக்கள் அன்பன்’ என்ற பட்டத்தை சீனுராமசாமி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி உதயநிதி நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் ’மக்கள் அன்பன்’ உதயநிதி என்று டைட்டிலில் குறிப்பிடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News