ஆண்ட்ரியாவுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் 'சார்பாட்டா பரம்பரை' வீரர்!

ஆண்ட்ரியாவுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் 'சார்பாட்டா பரம்பரை' வீரர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் ‘சார்பாட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்திற்கு பின்னர்தான் பொதுமக்களுக்கு குத்துச்சண்டை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் குத்துசண்டை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபல நடிகை ஆண்ட்ரியா ‘சார்பாட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் உடன் குத்துச்சண்டை பயிற்சி பெரும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES