மாலத்தீவு சென்ற நடிகை ஹன்சிகா … மீண்டும் பிகினி புகைப்படம் வைரல்!

மாலத்தீவு சென்ற நடிகை ஹன்சிகா … மீண்டும் பிகினி புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவில் பப்ளி நடிகையாக வலம்வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அதோடு 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அவர் முதல் முறையாக பிகினி உடையணிந்து ரசிகர்களை திக்கு முக்காட செய்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மாலத்தீவு சென்றுள்ள அவர் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

அந்தப் பதிவில் நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கும் நடிகை ஹன்சிகா நான் தண்ணீருக்கு அடிமையாகிவிட்டேன் என்ற கேப்ஷனுடன் புகைப்படம் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு “எஸ்கேப் ஃப்ரம் தாலிபான்“ எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஹன்சிகா தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை ஹன்சிகாவின் 50 ஆவது திரைப்படமான “மஹா“ விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதைத்தவிர சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையான “105 மினிஸ்ட்“ எனும் புதிய திரைப்படத்திலும் அவர் இணைந்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் ஒரே சிங்கிள் ஷாட்டில் இவர் நடிக்க இருப்பதும் படத்தில் நடிகை ஹன்சிகா மட்டுமே இடம்பெறுவார் என்பதும் பிரமிப்பாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

மேலும் “பார்ட்னர்“, “மை நேம் இஸ் ஸ்ருதி“ போன்ற திரைப்படங்களிலும் நடிகை ஹன்சிகா நடித்து வருகிறார். தனது 30 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மாலத்தீவு சென்றுள்ள அவர் நண்பர்களுடன் படு குஷியாக பொழுதை கழித்து வருகிறார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES