விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை !

விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை !

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடிப்பில் வெளியான கென்னடி கிளப் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் தான் மீனாட்சி.

இவர் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீசன் 4 தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தில் மீனாட்சி நடித்துள்ளதாகவும், இப்படத்தில் தன்னை வைத்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார் மீனாட்சி.

மேலும் இப்படத்தை தொடர்ந்து முகின் ராவ் நடிக்கும் வேலன், சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் சிவ சிவா திரைப்படத்திலும் மீனாட்சி நடித்து வருகிறார். 

விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ! - சினிஉலகம்

LATEST News

Trending News

HOT GALLERIES