ராதிகா ஆப்தேவை தடை செய்ய வேண்டும்: திடீரென வைரலாகும் ஹேஷ்டேக்!

ராதிகா ஆப்தேவை தடை செய்ய வேண்டும்: திடீரென வைரலாகும் ஹேஷ்டேக்!

நடிகை ராதிகா ஆப்தேவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவரை பாலிவுட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்றும் திடீரென சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் ஒன்று வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் எந்தவித கிளாமர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர் ஏற்கனவே நடித்த பழைய படங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து இந்த ஹேஷ்டேக் பரவி வருகிறது. இதற்கு காரணம் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்திற்கு ராதிகா ஆப்தே உள்பட யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.

ஆபாச படங்களை எடுத்த ராஜ்குந்த்ராவை கைது செய்யப்பட்டார் என்றால் அதேபோன்று ஆபாச படங்களில் நடித்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற குரல் தற்போது திடீரென ஒலித்து வருகிறது. ராதிகா ஆப்தே ஒரு சில படங்களில் நிர்வாணமாகவும் படு கிளாமராக நடித்து இருந்த நிலையில் அவர் இந்திய கலாச்சாரத்தை எடுக்கிறார் என்றும் இந்திய இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார் என்றும் 2000 வருட இந்திய பாரம்பரியத்தை கிளாமர் மூலம் நடிகைகள் கெடுக்கிறார்கள் என்றும் இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்து கோயில்களில் ஏதாவது பிரச்சனை நடந்தால் உடனடியாக பாலிவுட் திரையுலகமே திரண்டு கண்டிக்கின்றது என்றும், ஆனால் அதே பாலிவுட் திரையுலகம் ராஜ்குந்த்ராவின் செயலை கண்டிக்காமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறது அது போன்ற காரசாரமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் ராதிகா ஆப்தேவின் ரசிகர்களும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்திய கலாச்சாரத்தை யார் கொடுத்தார்கள் என்று கோயில் சிற்பங்களை போய் பாருங்கள் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ராதிகா ஆப்தே மட்டுமன்றி கங்கனா ரனாவத், டாப்ஸி, தீபிகா படுகோனே, கரீனா கபூர் உள்ளிட்டவர்களையும் தடை செய்ய வேண்டும் என இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News